கம்பர் காட்டும் இராமன் -- சகோதரன்
தமிழ்காட்டில் எழுந்த கற்கோயில்களில் சில காலப் போக்கில் சிதைந்தும், மறைந்தும் போயினபோதுங்கூடக் கவிஞர்கள் சிலர் கட்டிய சொற்கோயில்கள், கலைக் கோயில்கள் கால வெள்ளத்தையும் கடந்து வாழ்ந்து வருகின்றன. அத்தகு பெருமை பெற்ற சொற்கோயில்களுள் ஒன்றாவதும், கவிதை வளத்தில் தலையாயதுமாகத் திகழ் வதும் கம்பர் இயற்றிய இராமாயணமாகும். இச்சிறப்புக் கருதியே கம்பகாடன் கவிதையிற்போற் கற்றாேர்க் கிதயம் களியாதே’ என்ற பாராட்டுரையும் தமிழகத்தே எழுந்தது.
வால்மீகி வடமொழியில் வழங்கிய கதையினைத் தம் காப்பியத்திற்குக் கம்பர் கருவாகக் கொண்டாலும் முழுவது மாக வால்மீகியைக் கம்பர் பின்பற்றிவிடவில்லை. சிற்சில விடங்களில் தமிழ்நாட்டின் தனித்த மரபும் பண்பாடும் மறவாது கினைந்து கம்பர் தம் காப்பியத்தைப் புனேக் துள்ளார்.
கம்பர் தம் காவிய நாயகனை ரகு குலச்செம்மல் ரகுநாயகன-இராமபிரான மனிதப்பண்புகள் கிறைந்த மாமனிதனகச் சித்திரித்துள்ளார்: குரக்கினத் தலைவன் சுக்கிரீவன் முதன்முதலாகக் காட்டில் இராமனைக் கண்டதும்,