பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

“ களியிரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழில் ஆண்ட வுரவோன் மருக’

என்று சோழன் கரிகாற் பெருவளத்தானே வெண்ணிக் குயத்தியார் பாடுவதிலிருந்து வரலாற்றின் பழங்காலத் திலேயே தமிழர் கடல் வாணிகம் செலுத்திய வன்மை புலப்படுகின்றது.

சேரநாட்டுத் தேக்கமரம் வெளிநாடுகள் பலவற்றிற்குச் சென்று, அங்குப் பல கட்டடங்கள் எழும்பத் துணை கோலி யுள்ளது. தமிழ்நாட்டு நீலிச் சாயத்தில் தோய்த்த மெல்லிய துணிகள் மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தாகக் கூறப்படும் எகிப்து நாட்டுக் கல்லறைகளில் காணப்பட்டதாகக் கூறுவர். எ கி ப் த மட்டுமன்றிச் பாபிலோனியா முதலிய நாடுகளோடும் தமிழகம் வணிக உறவு வைத்திருந்தது. கி. மு. பத்தாம் நூற்றாண்டில் அரசாண்ட சாலமன் என்ற ஹீப்ரு மன்னன் தமிழகத்திலிருந்து பொன், வெள்ளி. தந்தம். குரங்கு, மயில், அகில் முதலிய பொருள்களைப் பெற்றுக் கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. பைபிளில் (Bible) “துக்கியம்’ என்ற சொல் மயிலைக் குறிக்கக் க்ாண லாம். தமிழில் தோகை’ என்ற சொல்லே ஹீப்ரு மொழியில் “துக்கியம் ஆனது. இவ்வாறே தமிழகத்து அரிசி, கிரேக்கத்தில் ஒரிசியாகவும், சந்தனம் பல மொழிகளில் வழங் கிப் பின் ஆங்கிலத்தில் சந்தல் (Sandal) ஆகவும் ஆனது.

தென்பாண்டிக் கடல் முத்து உலகப் புகழ்பெற்றது. தமிழ்நாட்டு முத்து. அதைப்போல் மூன்று மடங்கு எடையுள்ள மாற்றுயர்ந்த பொன்னுக்கு ரிகராக மதிக்கப் பட்டதாகவும், காயஸ் கிளாடியஸ் என்னும்

15. ւ յոթեո ՔԻTԱN : 66, 1-2