210
210
சேணுயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை அன்னது கினைக்க லாகுமோ’ என்று கூறிப் பரதனின் பண்புகலனைப் பலபடப் பாராட்டு கின்றான்.
கைகேயி தயரதனிடமிருந்து இரு வரம் பெற்று. ஒரு வரத்தால் ‘ஆழிசூழ் உலக மெல்லாம் பரதனே’ ஆளவும், பிறிதொரு வரத்தால் இராமன் தாமிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருங் தவமேற்கொண்டு காடு சென்று ஏழிரண்டாண்டுகள் கழித்துத் திரும்பி வர வேண்டும் என்றும் கூறிய அளவில் இராமனின் முகம் அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா” என்று கம்பாாடர் காட்டுகின்றார். உருளும் சக்கரம் கொண்ட வண்டியில் பூட்டப்பெற்ற காளையொன்று அருள் நிறைந்த மனத்தினன் ஒருவல்ை அவ்வண்டி யினின்றும் அவிழ்த்து விடப் பெற்ற பொழுது அக்காளே அடைகின்ற மகிழ்ச்சியினே அதுபொழுது இராமன் பெற்றான் என்பர் கம்பர். மேலும், கைகேயியிடம் இராமன் என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றாே?” என்றும் கூறித் தன் சகோதர அன்பைப் புலப்படுத்தின்ை என்பது உன்னி உணரத்தக்க தாகும்.
இராமனுடைய சகோதரத்துவம் தன்னுடன் பிறந்த தம்பியரிடம் மட்டுந்தாம் என்றில்லாமல், வெவ்வேறு இடங்களைச் சார்ந்த வெவ்வேறு வாழ்க்கை முறையினை யுடைய வெவ்வேறு இ ன த் த வர் பா லு ம் பரந்து விரிகின்றது.
ஆயிரம் அம்பிக்கு நாயகன் தூய கங்கைத் துறை விடும் தொன்மையான், காயும் வில்லினன், கல்திரள்
==
6 அயோத்தியா காண்டம் : திருவடி சூட்டு படலம் : 48