பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

212

“ அன்னவன் உரைகேளா அமலனும் உரைகேர்வான் என்னுயிர் அணையாய்ரீ இளவலுன் இணையானிக் கன்னுதல் அவள் கின்கேள் களிர்கடல் கிலமெல்லாம் உன்னுடை யதுகானுன் தொழிலுளி மையினுள்ளேன்.”

தன்னைப் போல் பிறரையும் ஒத்த உரிமை கொண்டு எண்ணி மதித்து உறவு கொண்டாடும் உயரிய உள்ள உணர்ச்சியே உண்மையான சகோதரத்துவமாகும்.

மேலும் இராமன் முன்பு நாங்கள் கால்வரிே சகோதரர்கள் என்றிருந்தோம். இன்று தொடங்கி நாம் ஐவராகி விட்டோம் என்று மனம் நெகிழ்ந்து பேசுகின்றான்.

“ துன்புளது எனினன்றாே சுகமுளது அதுவன்றிப்

பின்புளது இடைமன்னும் பிரிவுளது எனஉன்னேல் முன்புளோம் ஒருங்ால்வேம் முடிவுளது எனஉன்ன அன்புள இனிகாமோர் ஐவர்கள் உளராைேம்.’ மேலும், குகன் சுற்றத்தார் இராமனின் கிளைகளென் அறும், இராமன் சுற்றத்தார் குகனுடைய கிளைஞர் என்றும் அவர்களைப் பாதுகாக்க அயோத்தியில் குகனுடைய தம்பி யாகிய பரதன் இருக்கிருன் என்றும், சிருங்கிபேரத்தில் வாழும் இராமனுடைய சுற்றத்தினரைப் பாதுகாவல் செய்யக் குகன் அவசியம் கங்கைக் கரையிலேயே தங்க வேண்டும் என்றும் இராமன் குறிப்பிடுகின் ருன். அதனல் வேடுவர் குலத்தில் வந்த குகனிடம் சகோதர நேயங் கொண்டு ஒட்டி உறவாடிய இராமனின் உயர் பண்பு புலனுகின்றது.

அடுத்து, குரக்கினத் தலைவனுகிய சுக்கிரீவனையும் சகோதரகை ஏற்றுக் கொள்ளும் மாண்பினை இராம.

7. அயோத்தியா காண்டம் , கங்கைப்படலம் : 68 8. அயோத் தியா காண்டம் : கங்கைப்படலம் : 69