பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

214

அடுத்து, செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருருகராம்” இலங்கை வேந்தனகிய இராவணனின் தம்பி வீடணன் அரக்கர் குலத்தில் பிறந்தவன். சீதையைச் சிறை. யெடுத்த செயல் சீர்மை குலைக்கும் செயல் என்று கூறி. “அசைவில் கற்பிள்ை அணங்கை விட்டருளுதி என்று எடுத்து மொழிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாது வீடணனை இழித்தும் பழித்தும் மொழிந்தான் இராவணன். இதன் பின்னரும் அண்ணனிடம் இருந்தால் விளேயப் போகும் பயன் ஒன்றுமில்லை என்று எண்ணிச் சீதையை. மீட்கும் பொருட்டு வந்துள்ள இராமனைச் சரண் புகுவதே தக்கது என நினைந்து இராமன் தங்கியிருக்கின்ற, பாசறையை வந்து சேர்கிருன். எதிரியிடமிருந்து வந்துள்ள வீடணனைத் தம்முடன் சேர்த்துக் கொள்வது பெரும்பிழை. எனப் பலரும் கூறவும், மாருதி மறுத்து மொழிகிருன். இராமனும் “மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே. பெற்றி என்று கூறி, வென்றாலும் தோற்றாலும் அடைக்கலம் கேட்கிறவனே ஆதரித்தலே கடன் என மோழிந்து அடைக்கலத்தின் சிறப்பினைப் பின்வருமாறு, புகழ்ந்துரைக்கின்றான்;

“ காரிய மாக யன்றே யாகுக கருணை யோர்க்குச்

சீரிய தன்மை நோக்கின் இதனின்மேல் சிறந்த துண்டோ. பூரிய ரேனும் தம்மைப் புகல்புகுந் தோர்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார் எண்ணிலா அரசர்

அம்மா.’

இவ்வாறு வீடணனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனை அணேத்துத் தழுவித் தன் ஆருவது தம்பியாக

-

10. யுத்த காண்டம் ; வீடணன் அடைக்கலப்படலம் : 116