பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

216

தேவர்களையும் மானிடம் வெல்லும் முறையாக இராமனின் சகோதரப் பண்பு மிளிர்கின்றது. ஒரு தாயர் வயிற்றில் தோன்றாத இலக்குவன். பரதன், சத்துருக்கரிடத்தும் மட்டற்ற அன்பும், வேடுவர் குலக் குகனிடத்தும், குரக்கினச் சுக்கிரீவனிடத்தும், அரக்கர் குல வீடணனிடத்தும் சகோதர பாசமும் காட்டி வாழ்ந்த இராமனின் அன்பினை இராமாயணம் கூறிச் செல்கின்றது. சுருங்கக் கூறின், இராமாயணத்தின் நெடுகிலும் இராமனின் சகோதரத்துவப் பண்பு உணர்த்தப்படுகின்றது எனலாம்.