20
20
மேற்புல மன்னனுடைய மனைவி, மூன்று லட்சம் பவுன் மதிப்புள்ள முத்து அணிந்திருந்ததாகவும், தமிழ்நாட்டு முத்துக்களுக்கும் மணிகளுக்கும் ஈடாக இருபது லட்சம் பெறும் உரோம நாட்டுச் செல்வம் தமிழகத்திற்குக் கிடைத்ததாகவும் வரலாறு கூறுகின்றது. பிளைனி (Pliny) என்ற வ ர லா ற் ரு சி ரி ய ர் இதனை வருந்திக் குறிப்பிட்டுள்ளார். ‘
சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் பெயர்களும், ஆர்க்காடு, கரூர், முசிறி, தொண்டி கொற்கை, குமரிமுனை, பொதிகை, கோடிக் கரை முதலிய இடப்பெயர்களும் கிரேக்கர் முதலான மேனுட்டு மக்கள் குறிப்புக்களில் இடம்பெற்றுள்ள சிறப்பினைக் கால்டுவெல் காட்டுவர். ‘ கி. மு. 20ஆம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஒருவன் ஐரோப்பாவில் அங்காளில் புகழ் பெற்று விளங்கிய அகஸ்டஸ் மன்னனுக்குத் தாது அனுப்பின்ை. கி. பி. 223ஆம் ஆண்டில் ஏற்பட்ட உரோம நாட்டுக் குறிப்புக்களின்படி (Peutingerian Tables of 225 A.D) @ror-ru%gth a Grrld நாட்டு வீரர்கள் கொண்ட படை ஒன்று முசிறித் துறைமுகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. பழைய உரோம நாணயங்கள் பல தமிழகத்தில் மேற்குக் கடற். கரைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இக் கருத் துக்களுக்கு அரண் செய்கின்றன. ஸ்டிரபோவின்
--
16. Pliny complaincq in 70 A. D. that India drained gold to the value of nearly a million pounds a year giving back her own wares, which are sold among as at fully a hundered times their first cost.
—‘P. T. Srinivasa Iyenger, History of the Tamils, P.305.
17. Dr. Caldwell—A comparative Grammar of the Dravidian, languages, Introduction, pp.15-28.