220
220
அழகன்’ இராமன் காண்கின்றான். கண்னெடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் கிலேபெருது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினன்; அவளும் நோக்கிள்ை!, இவ்வாறு கண்வழி புகுந்து அவர்தம் கருத்தில் கிறைந்த காதல், பள்ளத்தில் பாயும் வெள்ளம்போல் உள்ளத்தில் ஒடி உறைந்தது. இதனேக் கம்பகாடர்.
“ பருகிய கோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாட்கண் கங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்’
என்று கயமுற நவில்கின்றார். இவ்வாறு ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர் போல் ‘மருங்கிலா கங்கையும் வசையில் ஐயனும் காதலில் கலந்து கட்டுண்டு கின்றனர்.
இதனேக் கம்பர். “ கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப்
பிரிந்தவர் கூடிஞல் பேசல் வேண்டுமோ”
என்று குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு ஆதி நூலான வான்மீகி ராமாயணத்தில் திருமணத்திற்கு முன்னர் இராமனும் சீதையும் கண்ட தில்லை என்றிருக்கவும். தமிழ் மரபில் வந்த கம்பர் கற்பெனப்படுவது களவின் வழித்தே’ என்ற தொல்லோர் கூற்றுப்படி, திருமணத்திற்கு முன்னர் இராமனும் சீதை யுங் ஒருவரை ஒருவர் கண்டு உளம் பறிகொடுத்த பான்மை யினைப் பண்பாட்டிற் கியைந்த முறையில் புலப்படுக்கி .யுள்ளார்.
3. பால காண்டம் : மிதிலைக் காட்சிப் படலம் : 37 4. பால காண்டம் : மிதிலைக் காட்சிப் படலம் : 38