225
225
குறுக்கிடுகின்றது. கில வெம்மையைச் சீதை தாங்காள் பrன்று இராமன் எண்ண, அப்பாலை கிலம் சோலேவன மாகமாறியது. “நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணல் விணர்து தன் அருளால் பாலே கிலத்தைச் சோலை ரிலமாக்கியது, சீதையின் மென்மைத் தன்மையினையும் அவள் உறு துயரத்தினைத் துடைக்க வேண்டும் என்று இராமன் கொண்ட அருள் உள்ளத் தினேயும் தெரிவிப்ப அாகும்.
சித்திரகூடத்தின் இயற்கை வளங்களை இராமன் சிகைக்குக் காட்டிச் செல்கின்ற போதும் அவள் குண நலன் களப் புகழ்கிருன். வாளும் வேலும் விட்டு அளாயின அ&னய கண் மயிலே’ என்றும், குருதிவாள் எனச் செவ்வரி பரந்த கண் குயிலே’ என்றும், உவரிவாய் அன்றிப் பாற் கடல் உதவிய அமுதே’ என்றும், “ஆடுகின்ற மாமயிலினும் அழகிய குயிலே’ என்றும், வில்லி வாங்கிய சிலைஎனப் பொலி நுதல் விளக்கே என்றும், ஒருவு இல் பெண்மை வான்று உரைக்கிற உடலினுக்கு உயிரே” என்றும், வீறு பஞ்சில் நல்அமிழ்த நெய் மாட்டிய விளக்கே’ என்றும், ‘லேம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே’ என்றும், வில்கொள்வாள் துதல் விளங்கு இழை இளங் களிர்க் கொழுந்தே’ என்றும், கினைத்த போதினும் அமிழ்து ஒக்கும் நேரிழை என்றும், மடங்தைமார்க்கு ஒரு திலகமே’ என்றும், ‘அலம்பு வார்குழல் ஆய் மயில் பெண் அருங்கலமே’ என்றும், தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே’ என்றும் பாராட்டுவது பெண்ணின் உளத்தைப் பொருந்த உணர்ந்த கணவன் இராமன் என்பதனோடு அப்பெண்மையினைப் போற்றவுஞ்செய்யும் பண்பாளன் என்பதும் விளங்கா நிற்கும். பெண்கள் பொதுவாகப் புகழ்ச்சியை விரும்புபவர்கள். இதனை உணர்ந்து சீதையைப்
15