பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21

விவரணம், பெரிபிளஸ் என்னும் நூல், பிளைனியின் “இயற்கை வரலாறு’ தாலமியின் பூகோள விவரணம்’ முதலியன தமிழர் நாகரிகச் சிறப்பை கன்கு விளக்குவன வாம். யவனரின் பாவை விளக்கு, புலிச்சங்கிலி, யவனப் பொறிகள் தமிழ் நாட்டில் இடம்பெற்று விளங்கின. வடநாட்டு வாணிகத்திலும் தென்னட்டு வாணிபமே சிறந்திருந்தது என்று சாணக்கியர் தம் அர்த்த சாஸ் திரத்தில் புகழ்ந்துரைத்துள்ளார். ‘

தமிழ் மொழியின் தொன்மை

தமிழினம் போன்றே தமிழ் மொழியும் பழமை யானது என்பது சொல்லாமலே விளங்கும். தொல் காப்பியத்தில் பலவிடங்களில் தொல்காப்பியனர் ‘என்மனர் புலவர்’, என்ப’ எனக் குறிப்பிடுவதனின்று கொல்காப்பியத்திற்கும் முற்பட்டே தமிழ் மொழியில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்தமை புலகுைம். மாக்ஸ் முல்லர் என்னும் மொழி நூலறிஞர் தமிழே

மிகவும் பண்பட்ட மொழி என்றும், தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக் கும் மொழி என்றும் பாராட்டியுள்ளார். ஆற்றல்

மிக்கதாகவும் சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்ப தாகவும் விளங்குவதில் தமிழ் மொழியை எம் மொழியும் விஞ்சமுடியாது என்றும், உள்ளத்தின் பெற்றியை உள்ளவாறு எடுத்துக்காட்டுவதில் வேறு எம்மொழியும் இயைந்ததாக இல்லை என்றும் பெர்சிவல் என்னும் அறிஞர்

18. K. A. Nilakanta Sastri, Al History of South India, ᏗᏢ . 81.

19. Tamil is the most highly cultivated language and

possesses the richest stores of indigenous literature.

–Max Muller