பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

228.

தையலாம் சிதை சொல் தேறி இராமன் மாய மான் பின் சென்ற கிலே மனைவியின் விருப்பத்தை மருது கிறை வேற்ற எண்ணிய கணவனின் உள்ளத்தைக் காட்டு: கின்றது அன்றாே சிதை சிறிதும் வருந்தப் பொறுக்காதவன் இராமன் என்பதும் இதல்ை புலனுகின்றது.

இராமன் அம்புவிட்ட அளவில் மாரீசன் இலக்குமன. என்று இராமன் குரலிற் கூறி மடிகிருன். மாரீசனின் மாயக் குரலே என்று தெளிந்த இராமன் இக்குரல் கேட்டு மழைக் கண் ஏழை சிதை அயர்வு எய்துவாள் என்று எண்ணி உள்ளம் வருக்தி விரைந்து பன்னசாலைக்குத் திரும்பினன். இச்செய்தி சீதையின் உள்ளத்தை உள்ளவாறே உணர்க் தவன் இராமன் என்பதனை உணர்த்தும்.

பன்னசாலையோடு சீதையைக் காணுத இராமன் உயிர் பிரிந்த யாக்கையென கின்றான். திகைத்து கின்றான். அப்போது மண் சுழன்றது. ஏழு கடல்களும் சுழன்றன. விண் சுழன்றது. விரிஞ்சன் சுழன்றது. சூரியனும் சந்திரனும் சுழன்றனர்.

இவ்வாறு சுழன்று மனம் மாழ்கி யின்றான் இராமன்: இது சீதைபால் இராமன் செலுத்திய ஆராக்காதலைப் புலப் படுத்துவதாகும்.

இதன் பின்னரெல்லாம் சீதையை எண்ணி ஏங்கும் விலைக்கு வந்துவிடுகின்றான் இராமன். உறக்கம் அவன் விழிகளைத் தழுவவில்லை. உண்டி முதலியனவற்றில் பற்று இல்லை. “வாங்கு வில்லன் வரும் வரும் என்று இருபாங்கும் ள்ேநெறி பார்த்தனளோ சீதை என்றும், இராவணன் “கில் கில் என்று நெருங்கியபோது அவள் என் கி.ஆனங் தனளோ என்றும் கூறி வெதும்பினன். வேண்டுமோ