பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

230

மருந்தின் அனையாள் அவயவங்கள்

அவை நிற்கண்டேன் வல்லரக்கன் அருந்தி அகல்வான் சிந்தினவோ

ஆவி உரைத்தி ஆம்அன்றே ‘ என்று பெரிதும் துன்புறுகின்றான்.

சிதை இட்ட அணிகல முடிப்பைக் கொணர்ந்து சுக்கிரீவன் காட்ட, எரிகனல் எய்திய மெழுகின் யாக்கை போல் உருகினன்.

சுக்கிரீவனும் தன்போல் தன் மனைவியை வாலியின் வலிமையால் பிரிந்துள்ளான் என்பதனைக் கேட்ட அளவில்.

“ பொருந்துகன் மனைக்கு உரிய பூவையைப்

பிரிந்துளாய் கொலோ நீயும் பின்’ “

என்றான். சுக்கிரீவன் வாலிக்குப் பயந்து அவனுக்கு உரிய தாரத்தையும் துறந்து வரழ்கிருன் என்று அனுமன் கூறக் கேட்ட இராமன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன் தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ’ எனக்கொதித்தெழுந்தான். வில்லிடை வாளியைப் பூட்டி வலியுடைய வாளியைக் கொன்று கின் தாரத்தை உனக்கு இன்றே உறுதியாகத் தருவேன் என மொழிகின்றான் இராமன்.

இங்கிலே ஒருவன் ஒருத்தியாக வாழும் இராமனின் எக பத்தினி விரதத்தினை நன்கு காட்டும். தன் தங்தை தயரதன் பலதார மணம் கொண்டவன யிருந்தும் இராமன் இறுதிவரை ஏகபத்தினி விரதத்தினேக் காத்து ஆணுலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் துலங்கின்ை.

மறைந்திருந்து இராமன் வாலியைக் கொல்ல, வாலி

14. கிட்கிந்தா காண்டம் : பம்பை வாவிப் படிலப் : 25 15. கிட்கிந்தா காண்டம் : நட்புக்கோட் படலம் : 35