பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231

கோவியல் தருமம் உங்கள்
         குலத்துதித் தோர்கட் கெல்லாம்
   ஓவியத்து எழுத வொண்ணா
         உருவத்தாய் உடைமை யன்றாே!
   ஆவியைச் சனகன் பெற்ற
         அன்னத்தை அமிழ்தின் வந்த
   தேவியைப் பிரிந்த பின்னர்
         திகைத்தினை போலும் செய்கை

16

என்று சீதையைப் பிரிந்த பேதைமயால் இராமன் மறைந்திருந்து அம்பெய்தினானோ எனக் கேட்கிறான். சீதையை இழந்த இராமனின் வருத்தம் வாலி கூற்றாலும் புலப்படுத்தப் படுகின்ற தன்றாே?

இராமன் பின்னரும் சீதையின் பிரிவால் வருந்தி, மேகம் முதலியவற்றை நோக்கி இரங்கிக் கூறினான்.

அசோகவனத்தில் சீதையைக் காண்கிருன் அனுமன் இராம இலக்குவரைப்பற்றிச் சீதை வினவ, 'மாய மானைக் கொன்று பன்னசாலை திரும்பிய இராமன் பின் திருவடிவு காணாது உயிர் ஊசலாடப் பல துன்பங்கள் பட்டான்’ என்று அனுமன் கூறினான். மேலும் அனுமன்,

“. . . . . . . . . . . . . எம்கோன், ஆகம்
 பூண்டமெய் உயிரே போகப் பொய்யுயிர் போல நின்ற
 ஆண்டகை கெஞ்சி னின்றும் அகன்றிலை அழிவுண் டாமோ
 ஈண்டு நீ இருந்தாய்; ஆண்டு அங்கு எவ்வுயிர் விடுமிராமன்”

17

என்று, சீதையிடம் கூறுகிறான். சீதையாகிய உயிர் அசோகவனத்தில் இருக்க, இராமன் காட்டில் அங்கு உயிர் விடுதல் எங்ஙனம்?' என்று கேட்கும் அனுமன் கூற்று. இராமன் தன் மனைவி சீதைமேல் ஆருயிரையே வைத்திருந் ___________________________________________

16. கிஷ்கிந்தா காண்டம்: வாலிவதைப் படலம்:84

17. சுந்தர காண்டம் : உருக்காட்டுப் படலம் :78