238
238
இலங்கக் காணலாம். சில நூற்களுக்குக் குறிப்புரை எழுதியவர்களின் பெயர்கள் கூட அறியப்படமுடியாத கிலே யில் புகழ், பெயர் விரும்பாத துாய பெரியவர்களாகத் துலங்குகின்றார்கள் பண்டைய உரையாசிரியர்கள்
காலஞ் செல்லச் செல்லக் கருத்துக்கள் வளர்பிறையென வளர்ந்து பெருகின. குறிப்புரை யளவில் அமைந்திருந்த உரைகள், விளக்சமும் மேற்கோளும் கொண்டு விரி வடைந்தன. நூலாசிரியர் சிலர் காம் எழுதிய நூல்களுக்குத் தாமே உரையுங் கண்டனர். தமிழில் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய சேரன் ஐயனரிதனர் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் நூற்பாக்கள் எழுதி, அவற்றின் கீழே துறைகளே விளக்கும் கொளுக்களை அமைத்து, அவற்றின் கீழே ஒவ்வொரு துறையினையும் விளக்கும் வெண்பா அல்லது மருட்பாவினையும் இயற்றிப் பின்னர் உரையும் கண்டுள்ளார். ஈண்டு, குறிக்கத்தக்க மற்றாெரு செய்தி உரையாசிரியர் சிலர் எழுதிய உரை விளக்கங்கள் காலப் போக்கில் பின்வங்தோர்க்கு விளங்காமற்போக உரைக்கு உரை எழுதவேண்டிய தேவை ஏற்பட்டு, அதன் விளைவாய்ப் பல உரைகளும் தமிழில் தோன்றின.
இனி, இடைக்கால உரையாசிரியர்களாக இளம் பூரணர் அடியார்க்கு எல்லார், சேனவரையர், பேராசிரியர், கச்சிர்ைக்கினியர், பரிமேலழகர் முதலான உரையாசிரியர் களேப் பற்றிய செய்திகளை ஒருவாறு காண்போம்.
உரையாசிரியர்கள் கங்தமிழ் மொழிக்குச் செய் துள்ள தொண்டு அளப்பரிதாம் காலம் பல கடந்தும் கன்னித்தமிழ் புகழ் குன்றாது பொலிக் திலங்குவதற்கு உரையாசிரியர்கள் ஆற்றிய பணி சொல்லுந்தரமன்று.