பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

240

என்னும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அர தனக் குவியல்களே உலகிற்கு முதலில் விளக்கிக்காட்டிய பெருந்தகையாளர்’ என்று இவரைத் தமிழறிஞர் பாராட்டுவர். தொல்காப்பியமாகிய பழம்பெரும் இலக்கண

நூல் தோன்றிய பல்லாண்டுகளுக்குப் பிறகு அந்நாலுக்கு உரை காண்பதென்பது அரிதானதோர் செயலாகும்.

இவருடைய உரைநடை தெளிந்த ஆழமான நீரோடை போன்று இருக்கும். எளிமையும் சுருக்கமும் இனிமையும் தெளிவும் கொண்ட உரையே இளம்பூரணர் உரையாகும். ஆரவாரத் தன்மையினே இவர் உரையில் பார்ப்பது அருமை: யாகும். பிறர் கருத்தை மதிக்கும் பெருந்தகைமையும், கடுவு நிலை பிறழாத கஞ்னெஞ்சமும் புலத்துறை முற்றிய புலமைப் பாங்கும் இவர் உரை முழுவதும் வெளிப்படக் காணலாம்தமிழ் நெஞ்சம் சான்ற இவரைப் பிற்காலத்துச் சிவஞான முனிவர் “தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்’ என்று. பாராட்டியுள்ளார், இளம்பூரணர் உரைகடையின் எளிமை. யும் தெளிவும் பின்வரும் பகுதி கொண்டு அறியலாம்:

‘இவ்வறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னேயெனின், சிறப்பு. கோக்கி என்க. என்னே சிறந்தவாறு எனின் முல்லையாகிய கிலனும் வேனிற்காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன. புயல்கள் முழங்கக் கவின் பெறும் ஆதலின். அதற்கு அது சிறந்ததாம். மாலைப்பொழுது இங்கிலத்திற்கு இன்றியமையாத முல்லை மலரும் காலம்

4. மு. இராகவையங்கார் : ஆராய்ச்சித் தொகுதி : ப. 398