பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241


ஆதலானும், அந்நிலத்துக் கருப்பொருளாகிய ஆனிரை வரும் காலம் ஆதலானும் ஆண்டுத் தனி யிருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின் அதுவும் சிறந்தது ஆயிற்று. இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டுள் ளார். இவ்வுரை 'இளம்பூரணம்' என்று வழங்கப்பெறும். இவர் காலம் பதினொன்றாம் நூற்றாண்டாகும். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட உரையாசிரியர்கள் ஐவர் ஆவர். இளம்பூரணர், , சேனா வரையர், நச்சினார்க்கினியர். தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய ஐவர் உரையினில் சேனாவரையர் உரையே சிறப் புடைத்தென்பர் அறிஞர். இவ்வுரை 'சேனா வரையம்' எனவும் வழங்கும். சேனாவரையர் உரையெழுதியதாக வேறு ஒரு நூலும் தெரிய வரவில்லை. சேனா வரையர் என்ற சொல் படைத்தலைவர் என்ற பொருளைத் தரும். இவர் 'வடநூற் கடலை நிலைகண் டுணர்ந்த சேனாவரையர் என்று கூறப்படுகின்றார். அதற்கேற்பவே வடநூல் மரபை யொட்டிச் சிலவிடங்களில் இவர் பொருந்தாவுரை புகன்றுள் ளார். இவருடைய உரை திட்ப நுட்பஞ் செறிந்தது; ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் புலமைச் சிறப்பும் கொண்டு மிளிர்வது. தருக்க நூல்முறை வழுவாமல் தடைவிடை களான் தம் கருத்துக்களைச் சேனாவரையர் நிலைநாட்டி புள்ளார்; ஆற்றல் சான்ற சொற்களைக் கையாண்டு. ஆழ மான பொருளை உணர்த்திப் பன்முறை பயின்றார்க்கே பொருள் விளங்கும் நிலையில் இவர் உரை அமைந்திருக்கக் காணலாம். சான்றாக, 'பண்போடு இவற்றிடை வேற்றுமை என்னை எனின். இன்மை பொருட்கு மறுதலையாகலின். ______________________________________________

5. தொல்காப்பியம் ; அகத்திணையியல் : நூ 12 உரை

      16