242
242
பொருளின்கண் கிடக்கும் பண்பு எனப்படாது! அன்மையும் உண்மையும் பண்பிற்கும் ஒத்தலின் பண்பு எனப்படா: என்ன? குணத்திற்குக் குணம் இன்மையின்’ என்று இவர் கண்டுள்ள உரைவிளக்கம் ஆழ்ந்து காணுவதற்குரியது.” இவர் தம் உரையால் அக்கால ஊர்கள், சாதிப்பிரிவுகள், போர் பற்றிய செய்திகள், மகளிர் மாண்புகள், கலைபற்றிய விளக்கங்கள், உழவு மற்ற பிறதொழில் வளங்கள் முதலியன விளங்கக் காணலாம்.
தெண்பாண்டி காட்டு ஆற்றுாரில் வாழ்ந்த இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது கல்வெட்டுச் செய்தி கொண்டு அறியலாம்,
போாசிரியர் என்னும் பெயரில் உரையாசிரியர் சிலர் உள்ளனர் என்பர். பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை கண்டவர் என்பர். ஆயினும் இன்று அவ்வுரை முழுதும் கிடைத்திலது. தொல்காப்பியப் பொகுளதி காரத்தின் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் முதலிய நான்கு இயல்களுக்கு மட்டுமே இவருரை காணப்படுகின்றது. இவர்தம் இயற்பெயர் யாதெனத் தெரியவில்லை. இவர் பேரறிவின் பெருந்திறத்தினை வியந்து பேராசிரியர் எனப் பின்வந்தோரால் வழங்கப்பெற்றிருக்க லாம். மதுரை ஆசிரியர் என்றும் இவரை அழைப்பர். இவர் உரையில் முச்சங்கத்தைப்பற்றிய செய்திகளும், சில வரலாற்றுக் குறிப்புக்களும் அமைந்திருக்கக் காணலாம்.
இவர் @-600s soo)l- கயம் வாய்ந்தது: செப்பம் பொருந்தியது: சுருங்கச் சொல்லல், தெளிவுறுத்தல் என்னும் கலஞ்சான்றது. சில சொற்களுக்கு இவர் உரை காணும் கயமும் ஆராய்ச்சி வன்மையும் வியக்கத்
6. தொல்காப்பியம் ; சொல்லதிகாரம் : நூ. 214 உரை