பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

246

எனத் தொடங்கும் பாடலுக்கு இவர் எழுதும் உரை பன்முறை படித்து கலங்காணத் தக்கது.

கணவற்கு மெய்ம் முழுதும் இனிதாய் இருத்தலின் கரும்பு. கல்லார் உறுப்பெல்லாம் கொண்டு இயறறலின் தேன். இவ்வுலகில் இல்லாத மிக்க சுவையும் உறுதியும் கொடுத்தலின் அமிர்து. காம வேட்கையை விளைவித்து இனிய பண் தோற்றலின், மழலையை யுடையதொரு யாழ். கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின் திரு. கடையால் அன்னம். சாயலால் மயில். காலமன்றியும் கேட்டார்க்கு இன்பம் செய்தலின் குயில். மன்னன் மகளே என்றல் புகழன்மையின் மன்னன் பாவாய் என்றது. அவன் கண்மணிப்பாவை என்பது உணர்த்திற்று! இனி இவள் கொல்லிப் பாவையல்லள், மன்னன் பாவை என்றுமாம். சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின் பூவை: நோக்கத்தால் மான்.”

இத்தகு பல்கலைப் புலமை நிரம்பியவர் கச்சினர்க் கினியவர் ஆவர்.

சிலப்பதிகாரத்திற்கு முதலில் உரை கண்டவர் அரும்பதவுரையாசிரியர் ஆவர். ஆராய்ச்சித் தெளிவும் ஆழ்ந்த புலமையும் கொண்ட இவர் கல்லதோர் உரை யினைக் கண்டுள்ளார். வழக்குரை காதையில் ‘கணவனே இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்ற தொடருக்கு ‘ “தந்தை தாய் முதலாயிைேரை இழந்தார்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டலாம். இஃது அவ்வாறு வாக்கானும் சொல்லலாகாமையின் காட்டுவதில் என்றாள்” என்று பண்பாட்டிற் கியைந்த அரியவுரை கண்டுள்ளார்.

அடியார்க்கு நல்லார் பொப்பண்ண காங்கேயன் என்னும் கன்னட அரசனல் ஆதரிக்கப் பெற்றவர் என்

15. சிலப்பதிகாரம் : வழக்குரை காதை . வரி : 80 உரை