பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

254

நெற்கதிர்களே ஏற்றிச் செல்ல வண்டிகள் அணியணியாய் வந்து விற்கின்றன. கதிர் அறுப்போர் ஆரவாரத்தை எழுப்புகின்றனர். வரப்போரம் விளைந்திருக்கும் கமுக மரங் களில் இருந்து உதிரும் பாக்குகளைச் சுமப்போர் செய்யும் ஆரவாரம் எங்கும் எதிரொலிக்கின்றது. இவ் ஆரவாரத்தினே யெல்லாம் கேட்கும் கவிஞர் ஒரு கணம் திகைத்து விற்கின்றார். இவ் ஆரவாரங்களை யெல்லாம் எங்கேயோ கேட்ட நினைவு அவருக்குத் தோன்றுகின்றது. ஆம்l அவருக்கு இதோ வினேவு வந்துவிட்டது! வகுதை நகர் வள்ளல் அபுல்காசீமின் வளமனையின் செருக்கை நிகர்த்த தன்றாே இவ் ஆரவாரம் என்று கினைக்கும் கவிஞர் நெஞ்சில் இருந்து கவிதை உள்ளத்தோடும், நன்றி உண்ர்வோடும் கூடிய பாட்டுப் பிறக்கின்றது. அப்பாடல் வருமாறு : “ செங்கெலின் கனகுரற் சகடங்

திசைதொறும் மலிந்தன செருக்கும் கன்னலங் கழனிபுகுந் தறுத்தடைந்த

களமர்கள் ஒலிகுரல் செருக்கும் துன்னுபூங் கமுகு சிதறுசெம் பழுக்காய்ச் சுமப்பவர் கம்பலைச் செருக்கும் மன்னவன் வகுதைத் துரை,அபுல் காசீம்

வளமனைச் செருக்கும் ஒத்திருக்கும்’

நகரப்படலத்தை அடுத்து தலைமுறைப்படலம் கூறிப் பின்னர் நபி அவதாரப்படலம் பாடுகிறார் உமறுப் புலவர். இருண்ட வானத்தில் ஒளி விளக்கேற்றிடும் கதிரவனுய், வற்றிய பாலேயில் கிழல்தரும் மரமாய், பிறவிப் பிணியினைப் போக்கிடும் அருமருந்தாய், வாடிய பயிருக்கோர் வள மழையாய், குறைஷியர் குலத்திற்கு ஒரு திலகமாய், மாகிலம் தனக்கோர் மணிவிளக்காய்

3. சீருப்புராணம் : நாட்டுப் படலம் : 41