256
256
விண்டலர் விரித்துக் காய்த்தன போலும் விளங்கிடக் குருந்தொடு காயா
வண்டுறை பிடவும் கொன்றையும் செறிய வளைதருங் குடியிடை பொதுவர்
வெண்தயிர் உடைக்கும் ஒலி மா ருமுல்லை வேலியுங் கடந்தயல் போனார்.’
நபிகள் நாயகம் தம் குழாத்தொடு முல்லை நிலத்தைக் கடந்து ஒரு சோலைக்குள் தங்கி இருந்தபோது அன்னே கதீஜா அவர்கள் அழகிய கனவு காணுகின்றார். கண்டது கனவென அறியாமல் கனவென்று மயங்கி வெளியே வந்து பார்த்தபொழுது அண்ணலாரைக் கண்டாரில்லை. மாருத மனத்துயரைக் கொண்ட பெருமாட்டி அணிமணிகளை வெறுத்து அழகு ஒப்பனையை வெறுத்துச்சுவை உணவினைத் தாரத்தள்ளித் துயரமே உருவானர்கள் என்று உமறுப் புலவர் சித்திரிக்கின்றார்,
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அன்னே கதீஜா காயகியைத் திருமணங்கொள்ளும் பெருகல விழாவினைக் கவினுறக் கவிதையில் வடித்துள்ளார். விண்ணையும் மண்ணையும் விளக்கமுற வைக்கும் சுடர் மணிவிளக்காம் கதீஜா அன்னேயார் அவர்களைப் பொற்குடத்துப் புதுக் குளிர் ரோல் புனலாட்டி, வெள்ளிய நிலவைப் பழிக்கும் துளய ஆடைகளே உடுத்தி அணிபெறச் செய்து, பல்வகை இசைக்கருவிகள் முழங்க, பாங்கியர்கள், காயகத்திருமேனி மஹம்மது முஸ்தபா. ரஸ்-இல் (ஸல்) அவர்கள் அருகில் அமரச் செய்தார்கள். இதனே நாமணக்கப் பாமணக்க கெஞ்சம் அள்ளுறித் ததும்ப, அழகுத்தமிழில் புதுக்கவிதை புனைகிறார் உமறுப்புலவர். செம்மை சான்ற சொற்கள்
5. சிருப்புராணம் : கதிஜா கனவு கண்ட படலம் : 4