பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

யாறு, பஃறுளியாறு என்னும் இரண்டு பேராறுகள் பாய்ந்து வளம் பரப்பின. அங்கிலப் பரப்பில், ஏழ்தெங்க காடு, எம் மதுரைகாடு, ஏழ் முன்பாலைகாடு, ஏழ் பின்பாலேகாடு, ஏழ் குன்றநாடு, ஏழ் குணகரைாாடு, ஏழ் குறும்பனே காடு என நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்றும், அவை கடல்கோளால் அழிந்தன என்றும் சிலப்பதிகார உரையால் தெரிகின்றது. அவ் வாருயின் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழினமே வரலாற்றுப் பழமையுடைய இனமாகக் கொள்ளக் கிடக் கின்றது. இவ்வாறு தென்னிந்தியாவில் பன்னெடுங் காலத்திற்கு முன்பே வாழ்ந்த மக்கள் தமிழர் என்று குறிக்கப்பட்டதோடு வரலாற்றுத் தெளிவு கருதித் ‘திராவிடர்” என்ற பெயராலும் வழங்கப்பட்டனர். வட நூலார் தமிழரைத் திராவிடர்’ என்று வழங்கினர்.

வரலாற்றுக்கு எட்டாத காலம் முதல் தமிழ்நாட்டில் கிலேயான அரசியல் அமைப்பு சீரும் சிறப்புடனும் துலங்கியது. சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று வேந்தர் மரபுகள் இருந்து வந்தன.

"வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று"

என்ற குறளிற்கு விளக்கவுரை எழுதப் புகுந்த பரிமே லழகர் பழங்குடி என்ற சொல்லிற்குப் படைப்புக் காலக் தொட்டு மேம்பட்டு வரும் குடி, சேர சோழ பாண்டியர் குடி என்றாற்போல’ என்று மூவேந்தர் மரபினின் பழை மையினேக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியனரும் .

"போங்தை வேம்பே ஆரென வருஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்

"

1. சிலப்பதிகாரம், இந்திரவிழஆரெடுத்த காதை- வரி 28-34. 2. திருக்குறள் 9.55, 3. தொல்காப்பியம் : புறத்திணை இயல் 5.