258
258
ஈண்டு மேலே காட்டிய பாக்கள் பண்டைத்தமிழ் இலக்கியப் பாடல்களின் பாங்கிலும் போக்கிலும் அமைந்து கிடக்கக் காணலாம்.
அபிபு மக்கத்துக்கு வந்த படலத்தில் அபிபு அரசரின் சேஆனகள் மக்கம் என்னும் மாநகரை வந்தடைந்த கிலேயினை வருணிக்கும் உமறுப்புலவர் கம்ப காடரின் தண்டலே மயில்க ளாட என்னும் பாடலின் சொற்களையும், போக்கினேயும் பெரிதும் பின்பற்றுகின்றார். அப்பாடல் வருமாறு:
“ வண்டுகள் உண்டு பாட
மணிச்சிறை மயில்க ளாடக் கொண்டல் கண்துங்குஞ் செக்தேன்
கொழுங்கனி குழைபைங் காவு முண்டகத் தடமும் செவ்வி
முருகவிழ் கழனிக் காடுக் தெண்டிரை பரந்த தென்னத்
திரட்படை படர்ந்த தன்றே.’
உவமை என்பது கவிச்சுவையை மிகுவிக்கும் ஒரு சாதனம்; பொருளை விளக்கப் பெரிதும் பயன்படும் கருவி. உவமையின்மூலம் ஒப்பற்ற கருத்தினை வெளிப் படுத்தும் உமறுப்புலவரின் புலமையே புலமை! பாலையை வருணிக்கப்புகும் உமறுப்புலவர் உலகுக்கு இயைந்ததோர் அரிய கருத்தினை உவமைமூலம் கயம் படப்புலப்படுத் தியுள்ளார், மான் கூட்டங்கள் IBir விடாய் கொண்டு நீரைத் தேடி ஒடி ஒடி அலைகின்றன. துாரத்தே காணும் பேய்த்தேரை (கானல் நீரை) நீரெனக் கருதி ஒடிப் பார்த்து நீர் அன்று என்று தெரிந்து நெஞ்சம் வெதும்புகின்றன. இரக்கத்திற்குரிய
8. சிருப்புராணம் : அபிபு மக்கத்துக்கு வந்த படலம் : 61