பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

267

குறிக்கும் சொல்லாகும். வாரம் என்பது இசைப் பாட்டு வகைகளில் ஒன்றென்பர். கடவுளைத் துதிக்கும் இசைப் பாடல் என்பது தேவாரம் என்னும் சொல்லின் பொரு. ளாகும். வாரம்’ என்ற சொல்லிற்கு அன்பு எனப் பொருள்

கொண்டு தெய்வத்தின்பால் உள்ள அன்பிற்ை பாடப். பெற்ற பாடல் எனச் சிலர் பொருள் விரிப்பர். தே+ ஆரம் எனப் பிரித்து, தெய்வத்திற்கு ஆரம்போல அமைந்தது. எனத் தேவாரத்திற்குப் பொருள் கூறுவதும் உண்டு.

தேவாரம் என்ற சொல் பிற்காலத்தில் வழக்கிற்கு. வந்திருக்க வேண்டும். ஏனெனில் கல்வெட்டுக்களில் “திருட்பதியம்’ என்ற சொல் தேவாரப்பாடல்களைக் குறிக்க. வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். பதினேராம் நூற். ருண்டுக் கல்வெட்டொன்று தேவாரத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி திருகாவுக்கரையன்’ என்று குறிப்பிடுகின்றது. தேவாரம் திருநெறித் தமிழ். என்றும் போற்றப்படுவதாகும்.

தேவார மூவர் பாடிய பாடல்களை ஒளவையார் மூவர் தமிழ்’ என மொழிவர். மூவர் பத்திப் பெருக்குடன் பாடிய திருப்பதிகங்கள் எண்ணில் அடங்காதனவாகும். பல பாடல்கள் தில்லைத் திருக்கோயிலின் ஓர் அறையில் பன்னாள் கறையான் புற்றால் மூடப்பட்டிருந்தமையால் பெரும் பாலான ஏடுகள் பழுது பட்டங்லேயில் இருந்தன. ஒரு. சிலவே கன்னிலையில் 5ம் கைக்குக் கிடைத்தன.

முதலாம் இராசராச மன்னனின் வேண்டுகோட். கிணங்கத் திருகாரையூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றிப் பொல்லாப் பிள்ளையாரை வழிபட்டுப் பெருமை கொண்ட நம்பியாண்டார் கம்பிகள் என்னும் அடியவர் மேற்கொண்ட பெருமுயற்சி இன்று ஈம்மிடையே திருப்பாடல்களே