பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

268

தேவாரச் செல்வத்தைத் தந்துள்ளது. திருமுறைகளைத் தொகுத்த திருப்பணி கம்பியாண்டார் நம்பிகளையே சாரும் “மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்’ என இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பர நாதருலா குறிப்பிடுகின்றது. ஆயினும் மூவர் பாடிய பாடல்களைத் தேவாரம் என்ற பெயரால் முதன் முதல் சைவ எல்லப்ப காவலர் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘’ வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்

உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள்

எம் உயிர்த் துணையே’ எனப் பாடியுள்ளமை காண்க.

முதல் திருமுறையினைப் பாடியவர் திருஞான சம்பந்தப் பெருமானவர். சோறுடைத்த சோழவள நாட்டிலே

சீகாழிப்பதிலேயே வேத நெறியிலும், வேள்வி நெறியிலும் வாழ்ந்த சிவபாத இருதயருக்கும் அவர் மனைவியார்

பகவதியாருக்கும் பிறந்தவரே சம்பந்தப் பெருமான் ஆவர்.

மூன்று வயதிலேயே அம்மையின் ஞானப் பாலுண்டு,

“தோடுடைய செவியன்’ பாடத் தொடங்கிய ஞானப் பெருந்தகை ஞானசம்பந்தராவர். அவர் பாடிய முதல் பாடலே நெஞ்சத்தைப் பிணிக்கும் நேர்த்தியை உடைய

தாகும், பொருளாழம் மிகுந்த அப்பாடல் வருமாறு:

“ தோடுடைய செவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடையசுட லைப் பொடியூசியென் உள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை காட்பணிக் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே.’

திருஞானசம்பந்தர் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கப்

பாடிய அருட்திருப் பாசுரங்கள் பலவாகும். சம்பந்தர்

_

5. முதலாந் திருமுறை : திருப்பிரமபுரப்பதிகம் : 1