269
269
திருப்பாடல்களிலே இயற்கையின் இனிய பெற்றியினை ாயமுறக் காணலாம். இறைவனின் இணையற்ற திருக் கோலம், இவர் பாடலைப் படிப்போர் கண்முன் கூத்தாடும். இவர் பாடிய பதிகங்கள் பதியிைரம் என்றும், அவற்றில் பல சிதலால் அழிந்தன என்றும் கூறுவர். இப்போது கிடைத்துள்ள பாடல்கள் 383 பதிகங்களாகும். அவற்றில் முதல் 6 பதிகங்களே முதல் திருமுறையாகவும், அடுத்த 122 பதிகங்களை இரண்டாவது திருமுறையாகவும், இறுதி 125 பதிகங்களே மூன்றாவது திருமுறையாகவும் ாம்பியாண்டார் நம்பிகள் வகுத்தமைத்துள்ளார்.
முதல் திருமுறையில் வரும் முதற் பதிகமாகிய “தோடுடைய செவியன்’ என்ற பிரமபுரப் பதிகம் “மெய்ம்மை மொழித்திருப்பதிகம்’ எனச் சேக்கிழாரால் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மறைகளுக் கெல்லாம் முதலாக அமைந்த பெருமையுடையது, ‘ஓம்’ எனும் பிரணவ எழுத் காகும்: ‘ஓம்’ என்பதிலுள்ள ஒகாரத்தினைத் ‘தமிழ்’ என்பதன் முதலெழுத்துக்க ளமைந்த தகர மெய்யுடன் இணைத்துத் தொடங்கிய சிறப்பு தோடுடைய செவியன்’ எறும் இத்திருப்பதிகத்துக்கு உண்மையால், எல்லேயிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை, மல்லல் நெடுந்தமிழ் எனப் போற்றப் பெறுவதோடு முதல் திருமுறையில் முதல் திருப்பதிகமாகவும் முறைப்படுத்தப் பெற்றுள்ளது. இத் திருப்பதிகத்திற்குரிய பண் கைவளம் என்பதாகும். கைவளம் மிகப் பழமையான பண்ணுகும். “கைவளம் பழுகிய நயந்தெரி பாலை’ என்பது சிறுபானற்றுப் படைத்தொடர்.” இப்பண்ணை இக்காலத்தார் கட்ட பாடையென வழங்குவர், திருஞானசம்பந்தப்பெரு.
_ _
0. சிறுபாணுற்றுப் படை : 86