272
272
“பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
தாகப்புத் தேளிர்கூடி மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங்கோயில் செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந் தோங்கு
மிலக்குடைக்கீழ்ச் செய்யார் செங்கெல் வெறி கதிர்ச்சா மரையிரட்ட விளவன்னம
வீற்றிருக்கு மிழலையாமே.”
இவ்வாருகத் திருஞானசம்பந்தப்பெருமான் பாடியுள்ள முதல் திருமுறை சிறப்புகலம் வாய்ந்ததாகத் தெரிகின்றது. சின்னஞ்சிறு வயதிலேயே நெஞ்சையள்ளும் சிறந்த பதிகங் களைப் பாடிய பெருமை சம்பந்தரையே சாரும். கா மணக்கும் வாய் மணக்கும் பா மணக்கும் நல்ல தமிழ்த் தெய்வப்பாடல்களே கற்றமிழர் சமுதாயத்திற்கு அளித்தவர் அவர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் தம் தெய்வத் திருமுறைப் பதிகங்கள் நமக்கு கல் வழி காட்டும் கன்னிர்மை வாய்ந்தன என்பது வாய்மையுரை யாகும். -
7. முதலாந் திருமுறை : திகுவிழிமிழலைப் பதிகம் : 2