274
274
தோன்றினர்கள். மெய்வாழ்வு வாழ்வதாக நடித்துப் பொய் வாழ்வு வாழும் உலக மக்களைத் திருத்தி அவர்களைச் சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திட வள்ளற்பெருமான் இவ்வுலகில் இறையருளால் பிறந்திட்டதாகவும், இகத்தில் அவர்கள் பரத்தைப் பெற்று மகிழ வேண்டித் தாம் திருவவதாரம் கொண்டதாகவும் வள்ளற்பெருமானே திருவருட்ப ஆருந் திருமுறையில் சாற்றுகின்றார்.
“ அகத்தே கருத்துப் புறத்துவெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்க் திடுதற் கென்றே என இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே’ ‘
என்று பாடிய திருப்பாடலை கோக்குக: வள்ளம் பெருமான் பிறப்பின் காரணம் துலக்கமுறும்.
இயற்கையில் ஈடுபாடு
இத்தகு உயந்த செயலுக்காகத் திருவவதாரம் செய்த வள்ளம் பெருமான் அவர்கள்.ஆரவாரத்திலும் ஆடம்பரத் திலும் நெஞ்சைப் பறிகொடுக்க வில்லை. ஆரவாரமும் போலி வாழ்வும் மிகுந்த சென்னை மாககளில் வாழ்ந்தால் எங்கே தம்முடைய உள்ளம் சிறுகுறுமோ என்று அஞ்சி, காட்டுப் புறங்களிலே இனிய ஊர்ப் பகுதிகளிலே சென்று வாழ்ந்தார் வள்ளம் பெருமான். ஊர்ப்புறங்களிலும் மக்களோடு பொருந்தி வாழாமல் காட்டிலும் பருக்கைக்
1. திருவருட்பா : ஆருந் திருமுறை : உற்ற துரைத்தல் : 9