பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

278

வீடும் வேண்டா விறல்

பக்திச்சுவை கனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார் பெருமான் தம் பெரிய புராணத்தில் திருக் கூட்டத்துச் சிறப்பினைச் சொல்லும் பொழுது,

“ கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினர்’

என்று குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசர் பெருமானும் தம் உழவாரத் திருத்தொண்டு செய்யும்பொழுது பருக்கைக் கற்களுடன் செம்பொன்னும் நவமணியும் கலந்து காணப் பட, அவ்வனைத்தையும் உழவாரத்தினிலேந்திப் பூங்கமல. வாவியிற் புக எறிந்தார் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவார்.

‘ செம்பொன்னும் கவமணியும் சேண்விளங்க ஆங்கவையும்

உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை யுடன்ஒக்க எம்பெருமான் வாகீசர் உழவாரத் தினிலேந்தி வம்பலர்மென் பூங்கமல வாவியினிற் புகஎறிந்தார்.’

இதனேயே வள்ளற்பெருமான் திருப்பாட்டிலுங் காண லாம்:

“ பணத்திலே சிறிதும் ஆசையொன் றிலைகான்

படைத்த அப் பணங்களைப் பலகால் கிணற்றிலே யெறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்

கேணியி லெறிந்தனன் எந்தாய்

7. திருக்கூட்டச் சிறப்பு: 8 8. திருநாவுக்கரச நாயனர் புராணம்: 417