பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22

வள்ளலார் கண்ட சீர்திருத்தம்

காலத்தின் இடையிடையே கவிஞர்கள் தோன்றுவர்' என்பர் அறிஞர். தாங்கள் பிறந்த காலத்தின் கருவியாகவும் கவிஞர் அமைவர்: கர்த்தாவாகவும் அமைவர். இவ்வகையில் தமிழ்நாடு செய்தவப் பயனய்த் தோன்றியவர் வடலூர் வள்ளற் பெருமான் ஆவர். பத்தொன்பதாம் நாற்றாண்டின் திருவருட் செல்வராயும், இத் தமிழ்மண்ணின் தனிச் சிறப்பாம் சித்த கணத்தின் வழிவந்த சித்தராயும். சீர்திருத்தச் செம்மலாயும், இயற்கை மருத்துவராயும், எவ்வுயிர்க்கும் இரங்கியழுத பேரருளாளராயும், அடக்கம். அன்பு, ஆன்மநேய ஒருமைப்பாடு முதலியவற்றின் பிரசாரகராயும் திகழ்ந்தவர் வாழ்விக்க வந்த வள்ளலார் ஆவர்.

நாணயத்திற்கு இருபுறங்கள் போன்று மக்கள் வாழ்க்கையிலும் இரு புறங்களைக் கண்டார் வள்ளலார். அகமும் புறமும் ஒத்தியங்காத அலங்கோல வாழ்வு மக்களின் வாழ்வாக உருக்கொண்டிருப்பதனை உள்ளிநைந்தார் கருணையே வடிவான வள்ளலார். புறத்தே வெளுத்துப் பொலிந்து அகத்தே கறுத்துத் தோன்றும் அவல வாழ்வினைப் ‘புறம் சுவர் கோலம் செய்யும்’ புன்மை நெறியாகக் கண்டார் வள்ளலார். உள்ளும் வெளியும் ஒத்து ஒளிராத இல்வாழ்வு-இருவேறு இயல்புகளைக் கொண்ட இந்நெறி மனித வாழ்விற்கே களங்கமாக அமைவதனைக் கண்டு அவர் வெறுத்தார். இத்தகு புன்னெறி தோய்ந்த அகப்புற