282
282
மாறுபாட்டை அகற்றுவதே தாம் பிறவி யெடுத்ததன் பயன் என்றும், பணியென்றும், அப் பணிக்கே இறைவன் தன்னே இங்கு அனுப்பினன் என்றும் வள்ளலாரே தம் திருப்பாட்டு ஒன்றில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்
திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித் திடஅவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்க்
திடுதற் கென்றே என இந்த உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே.” இறைவன் அருளால் தாம் உலகில் பிறந்ததனேயும்: அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர் அனே வரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடை வித்திடும் எண்ணமே தமது பணி என்றும் பாங்குற மொழி கின்றார் வள்ளலார். ጙ
அடுத்து, வள்ளற்பெருமான், ‘வாழையடி, வாழை யென வந்ததிருக் கூட்ட மரபினில்யான் ஒருவனன்றாே’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். திருவள்ளுவர் முதலான சான்றாே.ரிடத்தும், திருமூலர் முதலான சித்தரிடத்தும், ஞானசம்பந்தர் முதலான திருமுறைச் சா ன் .ே ரு ரி ட த் து ம் நீங்காத பற்றுக் கொண்டவர் வடலூர் வள்ளலார் ஆவர். இங்குக் குறிக்கப் பெற்ற அனைவரும் தமக்கென வாழாப் பிறர்க் கென வாழ்ந்த அருளாளர்கள் என்பதில் எட்டுணேயும் ஐயமில்லை. இவர்கள்பால் கொண்ட ஆரா அன்பினேயும் மதிப்பினையும் வள்ளலார் தம் திருவருட்பாப் பாடல்கள் பலவற்றில் புலப்படுத்தியுள்ளார். ஆயினும் வள்ளலார்
1. திருவருட்பா: ஆருந்திருமுறை: உற்ற துரைத்தல்: 9