283
283
ஆன்மீகத் துறையில் சீர்திருத்தச் செம்மலாய் ஒளிர்ந்தார். இருமுறைச் செல்வர்கள் வழி வந்தவராயினும், காலத்தின் ைெவயை உணர்ந்து சீர்திருத்தக்காரராயும் விளங்கினர்.
பிறருக்கு உழைக்கும் செயலினை வள்ளலார் ‘ஆன்ம லாபம்’ என மொழிந்துள்ளார். இரக்கம், அன்புக்கசிவு. அருள் உணர்வு இவற்றால் விளைவதே உயிர் வாழ்வின் மெம்பாடு என்பதனை நன்கு உணர்ந்திருந்தார். தாம் வழி பட்ட இறைவனே அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என ஏற்றிப்போற்றினர். பிற உயிர்கள்பால் வள்ளலார் காட்டிய வான் கருணையே அருட்பாப் பாமழையாகப்
பொழிர்தது.
“என் உரைத்தேன், இரக்கத்தால் எடுத்துரைத்தேன்’ என்று அவரே குறிப்பிட்டுள்ளார். இரக்கம் ஒருவிடில் என்றுயிர் ஒருவிடும் என்று கசிந்து மொழிகின்றார் கருணை வள்ளலார். மேலும்,
“எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட் பெருஞ் சிவமே’
என்று இறைவன், இரக்க சிங்தை உடையவர்களிடத்தே. உறைகின்றான் என்பதனைத் தெள்ளத் தெளிவாகப் புலப் படுத்தியுள்ளார்.
“ கடமாடுங்கோயில் கம்பர்க் கொன்றீயில்
படமாடுங் கோயில் பகவற் கங்காகும்’
என்று திருமூலர் பாடினர்.
--- ----
2. இருவருட்ப ஆருந்திருமுறை : அருட்பெருஞ்சோதி அகவல்:
481
8. திருமந்திரம் ; 1857