285
285
“ஒன்றே குலம் ஒருவனே தேவனும் என்றே கினேமின்’ என்றார் தவயோகியாம் திருமூலர். பிற்காலத்தே தாயுமாருைம் இந்நெறியில் பிறங்கினர். வடலூர் வள்ளம் பெருமானின் சீர்திருத்த கெஞ்சம் இத்துறையில் கல்ல பணியினை மேற்கொண்டது. அவர் பாடுகின்றார் :
சாதிசம யங்களிலே விதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திலிருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஒதிஉணர்ந் தோர் புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப்பொருளாம்
சோதிாடத் தாசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்க் தேனே.”
“ஈசனே அடைதற்குச் சாதிகள், சமயங்கள், பல பிரிவு களாக வகுக்கப்பட்டிருக்கிற சாத்திரங்கள் இவை எல்லாம் பாத்திரங்கள் அல்ல’ என்று வன்மையாகச் சாதிப்பிரிவு கஅளக் கண்டிக்கிறார் வள்ளலார் சாதிமத பேதமற்ற புதிய சமுதாயத்தினைக் காண வேண்டும் என்று பெரிதும் விழைந்தார் வள்ளலார். இறைவனுக்குப் பள்ளியெழுச்சிப் பாடும்பொழுது இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
“ மதம் பிடித் தவர்எல்லாம் வாய்பிடிப் புண்டு
வந்துகிற் கின்றனர் வாய்திறப் பிப்பான் கதம் பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார் பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்’ என்றும்,
6. திருவருட்பா : ஆருந்திருமுறை அனுபவமாலை 92 7. திருவருட்பா ஆருந்திருமுறை: திருப்பள்ளியெழுச்சி: 7