27
தலைவர்கள், காலாட்படைத் தலைவர், குதிரைப்படைத் தலைவர் யானைப்படைத் தலைவர் ஆகியவர் சேர்ந்து அமைந்தது எண்பேராயம் என்னும் குழுவாகும்.
அரண் : நாட்டிற்கு உள்நாட்டில் கள்வராலும், வெளிகாட்டிலிருந்து பகைவராலும் ஆபத்துண்டு. இவற்றிலிருந்து மீள வீரம் சார்ந்த படையும், நல்ல அரணும் தேவை. நாடும், தலைநகரமும் மதிலரண். கிலவரண், ரேரண், காட்டரண், மலையரண் என்னும் ஐவகை அரண்களுள் சிலவற்றையேனும் பலவற்றை யேனும் கொண்டிருந்தன. மதில்கள் உயரம், அகலம், திண்மை, அருமை ஆகிய இங்கான்கு இயல்பும் கொண் டனவாய் இருத்தல் வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆர்க்கிமெட்டீஸ் என்பவர் சைரக்யூஸில் உரோமரது முற்றுகையை எதிர்க்கப் பலவகை எந்திரங் களைக் கண்டுபிடித்தார் என்றும், அவையெல்லாம் ‘யவனப் பொறிகள்’ என்ற பெயரோடு தமிழ்நாட்டுக் கோட்டைகளில் இடம் பெற்று விளங்கின என்றும் அறிஞர் குறிப்பிடுவர்.” -
காவலரின் கடமைகள் : பழந்தமிழ் நாட்டின் மக்கள் பெருமளவு பயிர்த்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். பயிர்த் தொழிலுக்கு மண்வளமும் நீர்வளமும் மிகுதியும் தேவை. எனவே நீர்நிலையை அகலப்படுத்து தலும், ஆழமாக்குதலும், அவற்றின் கரையை உயர்த்து தலும், ஆற்றின் குறுக்கே அணைகட்டுதலும், நீர் பல வழி.
7. “உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்’
-திருக்குறள் : 748”
8. பேராசிரியர் தெ. பொ. மீ. - தமிழா நினைத்துப் பார்பக்கம் 11. -