288
288
நம் வடலூர்த் துறவியாரோ, வடலூரில் சத்திய தரும் சாலை கண்டு நாள் தோறும் பலருக்கு உணவளிக்கும் திறஞ் சான்றவராக விளங்கினர் என்பது ஒரு புரட்சியே யன்றாே?
“ பட்டினி யுற்றாேர் பசித்தனர் களையால்
பரதவிக் கின்றனர் என்றே ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீரெனநடுக் குற்றேன்” என்றும்,
“ ... . . . . . . . . . . . . பசியினல் இளைத்தே
வீடுதோ றிரங்தும் பசியருது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ என்றும்,
மண்ணுல கத்திலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவிவுறக் கேட்டும் கணமும்கான் சகித்திட மாட்டேன்” என்றும், அவர் பாடல்கள் வழிப் புலப்படுத்தியுள்ள கருத்தையும்,
“, பசியினல் வரும் துன்பத்தை நிவர்த்தி செய் விப்பதில் வருமின்பம் பயr இன்பமாகும்’
‘சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத் தில் ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகிறது. அது மயங் கவே அறிவுக்கறிவாகிய கடவுளின் விளக்கம் மறை படுகின்றது’
1s. திருவருட்பா: ஆருந்திருமுறை; பிள்ளைப் பெருவிண்ணப்பம்:22 19. திருவருட்பா: ஆருந்திருமுறை; பிள்ளைப் பெரு விண்ணப்பம்:
62
20. திருவருட்பா: ஆருந்திருமுறை; பிள்ளைச் சிறு விண்ணப்பம்:
23