290
290
“'சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடை யாகிய சமயம்,மதம் முதலிய மார்க்கங்களே முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும் காமக் குரோதம் முதலியவைகள் நேரிட். காலத்தில் ஞான அறிவினல் தடுத்துக்கொள்பவரும், கொலை, புலை தவிர்ந்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன் மார்க்கத்திற்கு உரியவர்களாவார்கள்’ என்றார். உடலைப் பழித்துத் துறவிகள் பாடியிருக்க வள்ளலார்,
‘புண் ணியப் பயனுய்ப் பெற்ற தேகத்தைக் கூடிய வரையில் சாக்கிரதையோடு பக்குவ மார்க் கத்தில் நடத்தல் வேண்டும்?’ என்றார். வட அார்த் துறவி பெண்ணுரிமையையும் பேசு கின்றார்.
“பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும், பேத மற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது. தத்துவம் முதலியவற்றின் சொரூப போதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினல், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரிய காலத்தில் ஒத்திருப்பார்கள். “தெய்வம் தொழாஅள்’ என்னும் தேவர் குறளால் இதை அறிக’ என்று வரும் வள்ளலார் வாக்கு அவர் பெண்ணினத் திற்கு வழங்கிய பெருஞ் சிறப்பேயாகு மன்றாே!
‘பிறவா வரம் தாரும் பெம்மானே’ என்பார் அடியார். “பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மைவர் தெய்தினேன்’ என்பர் சுந்தார். பிறவாமை வேண்டும் என ஆலங்காட்டுறை அண்ணலைக் காரைக் காலம்மையார் கசிந்து வேண்டியதாகக் கூறுவர் சேக்கிழார் பெருமான். ஆனல்