பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291

291

வடலுர் வள்ளலாரோ இறவாமை வேண்டுகிறார்: “என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்’ என்கிரு.ர். “இறவாமையிந்தானென் று.ாதுாது சங்கே” என முழங்கு பின்றார், ‘சாகாதவனே சன்மார்க்கி என்கிறார்,

“ சிறந்திடு சன்மார்க்க மொன்றே பிணி மூப்பு மரணம்

சேராமற் தவிர்ந்திடுங் காண் தெரிந்துவம்மி னிங்கே பிறந்த பிறப் பதிற்றான் கித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்ப முற்றிடலாம் விரைந்தே”

என்றும் கூறியுள்ளார். கொலேக் கருவிகளாலும் அழிக்க முடி யாக உடம்பினைத் தாம் பெற்றுவிட்டதாகப் பிறிதோ ரிடக் கல் கூறியுள்ளார். “மரணமிலாப் பெரு வாழ்வினை’ எய்துதல் என்பது உண்மை, சத்தியம் என்று எடுத்து மொழிகின்றார்.

‘உள்ளம் தளிர்ந்திடச் சாகாவரம் கொடுத்து’ என்றும், இறவாத பெருவரம் ஈந்த மெய்ப்பொருள்’ என்றும் இறைவனே வள்ளலார் குறிப்பிட்டுள்ளமை ஆன்மீகத் துறையில் அவர் காட்டிய புதிய நெறியினை உணர்த்தும்,

‘கையுற வீசி நடப்பதை காணிக் கைகளைக் கட்டியே’ ாடங்த துறவி அவர். காவித் துணியினைப் பிற துறவிகள் உடுத்த, “வெண்துகிலால் மெய்யெலாம்’ மறைத்த அது,ாவி அவர். பணத்திலே சிறிதுமாசையற்று இறைவன் “குணத்திலே பற்று மிகுந்தவர் வள்ளலார். ‘ஒருமை யுடன் இறைவன் திருமலரடி வினைக்கின்ற உத்தமர்தம் உறவு’ வேண்டியவர் வள்ளலார். ஒளி வழிபாட்டை ஏற்படுத்தியவரும் வள்ளலாரே ஆவர்.

24. திருவருட்பா: ஆருந் திருமுறை; மரணம் இலாப் பெரு வாழ்வு: