பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

292

இதுகாறும் கூறியவற்றால், வடலூர் வள்ளம் பெருமான், சாதிசமயச் சழக்குகளைக் கடந்த சமரச சன்மார்க்கத்தை ஆன்மீகத் துறையில் புகுத்தியவர் என்பதும், அரசியலிலும் சன்மார்க்கம் இடம்பெற வேண்டும் என எண்ணியவர் என்பதும், பசிப்பிணி கோய்ப்பிணி தீர்க்கும் சத்திய தருமச்சாலையினை வாழ்வில் கண்டவர் என்பதும், தமிழ்மொழிப் பற்றும், பெண் ளிைனம் உயர வேண்டும் என்ற பெருநோக்குங் கொண்டவர் என்பதும், மரணமிலாப் பெருவாழ்வினை இறைவழி எய்த முடியும் என்னும் கொள்கையினர் என்பதும். அனைத்திலும் மேலாக, எவ்வுயிர்க்கும் இரங்கியருளும் கருணையாளர் என்பதும் இவற்றின் வழி இவர் பத்தொன்பதாம் நாம் முண்டில் சீர்திருத்தச் செம்மலாய்த் தன்னிகரற்று விளங்கினவர் என்பதும் அங்கை நெல்லிக்கனியென விளக்கமுறும்.