294
294
யற்ற இன்பங் கண்ட புலவர்தம் உள்ளம் அவ்வினிய இயற்கையின் இன்பக் காட்சிகள் குறித்துப் பல கவிதைகளை வடித்துள்ளது. அத்தகைய சிறந்த கவிதைகளை நாம். படிக்கும் பொழுது இணையிலாத இன்பத்தினை அடை கின்றாேம். இயற்கை வழங்கும் எழிற் காட்சிகளை நேரே கண்டு, காட்சி இன்பம் பெற்று மகிழ்வது ஒருவகை. இயற்கையின் இனிய பெற்றியினைத் தம் பாடல்களில் இனிமையுற வடித்துத் தந்திருக்கும் கவிஞர்களின் பாடல் களேப் படித்து மகிழ்ச்சியில் திளைப்பது மற்றாெரு வகை. இரண்டாவதாகக் குறிப்பிடப் பெற்ற இன்பத்தினை காம் இருக்கும் இடத்திலிருந்தே பெற முடியும். நாம் வேண்டும். பொழுதெல்லாம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த இந்தக்
கவிதைகள் என்றும் வாழ்ந்து வருவனவாகும்.
கபிலர் என்னும் பழந்தமிழ்ப் புலவர் இயற்கையில் தோய்ந்த நெஞ்சம் கொண்ட இனிய புலவர் ஆவர். அவர்பாடலில் ஓர் அழகான இயற்கை வருணனை அமைந்துள்ளது. அது வருமாறு: ‘ஒரு வளமார்ந்த மலேப் பாங்களில் பசிய மூங்கில் மரங்கள் பல செழித்து வளர்ந்துள்ளன. அந்த மூங்கிலே வண்டு துளைத்துச் சென்றுள்ளது, அவ்வாறு வண்டு துளைத்துச் சென்ற அந்தத் துளைகளின்மேற். காற்று உட்புகுந்து வெளிவருகின்றது. அப்பொழுது பிறக்கும் இசை குழலோசை போன்று அமைந்து கொள்ளே இன்பம் கல்குகின்றது. அம் மலைச்சாரலில் குளிர்ந்த அருவி ஒன்று குதித்தோடிக்கொண்டிருக்கிறது. மலே முகட்டிலிருந்து. கீழ்நோக்கி வந்த அருவி நீர், பாறைகளில் விழும்பொழுது பெருத்த ஒசை பிறக்கின்றது. அந்த ஆரவார ஒலி முழ. வோசையாக ஒலிக்கின்றது. அந்த அருவியின் பாங்களில் கூட்டங் கூட்டமாகக் கலைமான் இனங்கள் தாழ ஒலித்துப்