பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

295

பெருங்குரல் எழுப்புகின்றன. அந்த ஒசை பெருவங்கி யத்தின் இசையாகஎேங்கும் நிறைகிறது. அந்த ஒசையுடன் மலைச்சாரலில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களில் உள்ள தேனைப் பருகுவதற்காக வண்டுகள் மிழற்றும் ஒலி யாழோசையாக அமைகின்றது. இவ்வாறு அந்த அழகிய” மலைப்பக்கத்தே எழுந்த பல்வேறு இனிய ஓசைகளைக் கேட்ட மந்திகள் ஆரவாரம் மிகுந்து, அப்பொழுது பக்க மலைகளில் அழகிய மயில்கள் ஆடுகளத்தில் புகுந்தாடும் விறலி போலத் தம் அழகிய வண்ணத் தோகைகளை விரித்தாட அல் ஆட்டத்தினைக் கண்டு வியந்து மகிழ்ந்து கிற்கின்றன.

“ ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்

கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுர லாகக் கணக்குலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து மக்தி கல்லவை மருள்வன கோக்கக் கழைவளர் அடுக்கத் தியலியா டும்.மயில் கனவுப்புகு விறலியில் தோன்றும்.” !

இவ்வாறு இயற்கையில் அமைந்த ஒர் இனிய காட்சி யினைக் கபிலர் நமக்கு இனிமையுற வழங்கியுள்ளார்.

கபிலர் காட்டிய இயற்கை வருணனையைக் கண்டு மகிழ்ந்த நாம் இளங்கோவடிகள் வழங்கும் இயற்கைக் காட்சி யின்க் காண்போம். இயற்கையன்னே இனிய கொஇ வீற்றிருக்கும் காலம் இளவேனிற் காலமாகும். இக்காலத்தில் தென்றலத் தேராகவும், இனிய கரும்பை வில்லாகவும். சோ.இலக் குயிலக் தூதாகவும் கொண்டு மன்னன் மாரன்

AAS SSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

1. அகதா ஆறு 82: 1.10