296
296
ஆட்சி செலுத்துகின்றான் என்று இளங்கோவடிகள் பாடி யுள்ளார். மேலும், அவர் அந்தி மாலையினை அழகாகப் புனைந்துள்ளார்.
‘உலக முழுவதிலும் தன் ஒப்பற்ற ஒளிக் கதிர்களைப் பரப்பி ஆட்சி செலுத்திய கதிரவன் மாலேக் காலத்திலே மேலைத் திசையில் மறைகின்றான். எங்கும் காரிருள் பரவிக் கிடக்கின்றது. வானத்திலே உலாவரும் வட்ட கிலா எங்கே யென்று மாநில மடங்தை, திசைகளாகிய தன் முகம் பசப்பூரப்பட்டு. செவ்விய மலராகிய கண்களிலிருந்து நீர்வார உடல் முழுதும் பனித்து வருந்துகின்றாள். அந்த மாலைக் காலத்தில் கோவலர் வேய்ங்குழலினே இசைத்து முல்லைப் பண்ணை எழுப்பி மகிழ்கின்றனர். மாலையில் மலர்ந்த முல்லை மலரில் வண்டுகள் ஊதிப் பண்ணை எழுப்புகின்றன. வண்டு களின் இத்தகைய குறும்புச் செயலினைத் தென்றல் கடிக் தோட்டுகின்றது. முல்லை மலரின் இனிய மணத்தினைத் தென்றல் தெரு வெங்கும் வாரி இறைக்கின்றது. ஒளி பொருர்திய வளையினை அணிந்துள்ள மகளிர், வளம் பொருந்திய ஊரில் மாலைக் காலம் வந்துவிட்டது என்று கண்டு, மனேயின் மாடத்தில் அழகிய விளக்குகளே ஏற்றி வைக்கிறார்கள். இத்தகு அழகு கிறைந்த அக்திப் போதில் செக்கர் வானத்தின்கண் வெள்ளிய பிறை கிலா தோன்றிப் பால் போலும் வெள்ளிய ஒளியை விரித்து மகிழ்ச்சியூட்டு கின்றது ‘
“ விரிகதிர் பரப்பி யுலகமுழு தாண்ட
ஒருதனித் திகிரி யுரவோற் காணேன் அங்கண் வானத் தணிகிலா விரிக்கும் திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லெனத் திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பணித்துத்
திரைt ராடை யிருகில மடங்தை ==