பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

களில் பிரிந்து பாயும்படி கால்வாய்களை வெட்டுதலும் அரசனுடைய கடமைகளாகக் கருதப்பட்டன.

“ காடுகொன்று காடாக்கிக்

குளங்தொட்டு வளம்பெருக்கி ‘'’

என்றபடி காட்டைத் திருக்திக் கழனியாக்கி, குளத்தை வெட்டி ர்ேவளத்தைப் பெருக்கி உழவுத்தொழில் மேலோங்க அரசர் ஆவன செய்தனர் என்பதனே அறிய லாம். அடுத்துக் கல்விச் செல்வத்தினே காட்டு மக்கள் குறையறப் பெறுவதற்கு ஒருகாட்டு மன்னன் ஆவன செய்தல் வேண்டும். சங்க காலத்தில் ஆண்களோ டன்றிப் பெண்களும் கல்வி கற்றிருந்தனர் என்பதனை முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடல்கள் கொண்டு தெளியலாம். காவலராக அன்றிப் பாவலராகவும் விளங்கிய அரசர் பலர் சங்க, காலத்தே வாழ்ந்தனர். அரச மாதேவியரும் பாடல்கள் பாடியுள்ள சிறப்பினைச் சங்கத் தொகை நூல்களில் காணலாம்.

திேநெறி திறம்பாது முறையான செங்கோல் செலுத்துதல் காவலன் கடுமையாகக் கருதப்பட்டது. “தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது முறை வேண்டுவோர்க்கு முறை வழங்குதல் அரசனின் கடமையாகும். சோறு சமைக்கும் தி அல்லது வேறு தீயின் கொடுமை அறியாமலும், ஞாயிற்றின் வெம்மை அல்லது வேறு வெம்மை அறியாமலும் குடி மக்கள் வாழ அவர்களைக் காக்கும் ஆட்சி முறையே சிறந்தது என்பது அக்காலக் கொள்கைகளாக இருந்து வந்தன. அரசன் காட்சிக்கெளியணுய் கடுஞ்சொல்லன்

9. பட்டினப்பாலை : வரி 283, 28 1.