பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

299

தென்றலில் த லேயசைத்துத் தீஞ்சுவை நீரினை இளரோக Sழங்கும்: பனே மரங்கள் நுங்கினே வழங்கி மகிழ்விக்கும். மாஞ்சோலை எங்கும் ஒருவகைப் புதுமணம் மாம் பூக்க ளால் எழும்பும் மேடை யெங்கும் மெல்லிய பூங்காற்று விசும். கோடையில் குளிர்தருக்களின் கிழல் இ8ளப் பாற்றிக் கொள்ளுதற் கேற்ப விளங்கும். குளிர் ஒடைப் புனலிலே ஊறும் தீஞ்கவைத் தண்ணிரை உண்டால் உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்கும். இத்தகு இனிமை ULJIN QUIT இளவேனிற் காலத்து இன்ப மாலையினைத் திருநாவுக்கரச நாயனர் இன்பம் பொங்கப் பாடுகின்றார், அவருக்கு இறைவனின் இணையடி நீழல், குற்றமற்ற யா/மிலிருந்து பிறக்கும் இனிய இசை போன்றும், இளவேனிற் காலத்து இன்ப மாலையில் தோன்றும் முழு மதியின் ஒளி போன்றும், மெல்லெனத் தவழ்ந்து விசும் தென்றம் காற்று போன்றும், இளவேனிற் காலத்தில் கிடைக்கும் இனிய நறுங்கனிச் சுவை போன்றும், வண்டுகள் பண்ணிசைக்கும் குளிர்நீர்த் தடாகம் போ ன் று ம் இனிமை பயப்பதாகத் தம் தேவாரப் பாவில் அவர் காட்டு கின் ருர்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

விசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எங்தை யிணையடி கீழலே.’

அடுத்து, கவிச் சக்கரவர்த்தி கம்பரும் இயற்கை வழங்கும் இனிய காட்சியினே எழிலுறத் தம் கவிதையில் வடித்துக் காட்டியுள்ளார். மருத கிலத்தினே வருணிக்கப் புகுந்த கம்பங்ாடர், ‘மலர்ச் சோலையில் மயில்கள் ஆட. தாமரை மலர்கள் அவ் ஆட்டத்திற்கு ஏற்ப விளக்

சி. ஐந்தத் திருமுறை தனித் திருக்குறுந்தொகை_ஆங்

பதிகம், முதற்பாடல்.