300
கமைத்து கிற்க, மழையைத் தரும் மேக கூட்டங்கள் முழவாக அமைய, குவளே மலர்கள் தம் கண்களை விரித்து அக் கவின் கிறைந்த காட்சியினைக் காணி. குளத்தில் எழும் அலைகள் திரைச் சிலைகளாக அமைய, மகர யாழிலி ருந்து பிறக்கும் இசை போன்று வண்டுகள் பாட, அழகான, மருத நில மங்கை இன்பக் கொலு வீற்றிருக்கின்றாள்.” என்று காட்சியின்பம் நல்கியுள்ளார்.
“ தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கங் தாங்கக்
கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து
கோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ’
இவ்வாருகத் தமிழ்க் கவிஞர்கள் பலரும் இயற்கை யழகில் தோய்ந்து தங்கள் மனத்தைப் பறிகொடுத் துள்ளமையினை அவர்தம் பாடல்கள் வழி அறியலாம். கவிஞர்கள் காட்டுகின்ற இயற்கைக் காட்சிகள் நம் நெஞ்சை அள்ளும் ர்ேமையனவாகும். க ரு த் ைத நிறைவிக்கும் அக்காட்சிகள் நம் கினேவில் என்றும் கின்று வாழுஞ் சிறப்புடையனவாகும். எனவே, காம் இயற்கை வழங்கும் இனிய காட்சிகளை நேரில் கண்டும் கவிஞர்கள் வடித்துள்ள இயற்கையின் அழகுப் பொலிவினை அவர் தம் கவிதைகளில் படித்தும் மாருத மகிழ்ச்சியில் திளைப்
போமாக!
க. கம்பராமாயணம்; பால காண்டம்; காட்டுப் படலம்: 4