பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

அல்லனாய் வி ள ங் கு த ல் வேண்டும் என்பர் திருவள்ளுவர்.10

புலவரையும் கலைஞரையும் போற்றுதல், புலமைச் செல்வர்களை அக்கால அரசர்கள் பெரிதும் மதித்தனர்; தம் கண்ணினும் இனிய கேளிராகக் கருதினர். அரசியலில் நெருக்கடி நேர்ந்தபோது புலவர்களின் அறிவுரைகள் கேட்டும், அவர்களின் இடித்துரைகளால் திருந்தியும் செம்மை பிறழாமல் ஆட்சி புரிந்தனர். அரசனுக்கும் அவன் மக்களுக்கும் இடையிலும், ஓரரசனுக்கும் மற்றாேர் அரசனுக்கும் இடையிலும் பிணக்கு நேரிட்டபோதெல்லாம் புலவர் இடை நின்று தக்க அறவுரை கூறித் திருத்தி அமைதி கோறியுள்ளனர். வீட்டுக் குழப்பமாயினும் சரி, நாட்டுக் குழப்பமாயினும் சரி, புலவர்கள் தலையிட்டு நன்மை புரிந்தனர். அரசர்களால் பொன்னும் பொருளும் பெற்று அதைப் பிறருக்கும் வாரி வழங்கி மகிழ்ந்து வாழ்ந்தனர். கலைஞர்கள்-பாணர், கூத்தர், விறலியர் முதலியோர் தாம் கற்ற கலைத் திறமையின. மன்னன் முன் காட்டி அரங்கேற்றிப் பெரும் பரிசு பெற்று. வறிய கலைஞர்க்கும் வளம் பெற வழிகாட்டி மற்றக் கலைஞர்க்கும் பகுத்தளித்து வாழ்ந்து வந்தனர். இயல் இசை, நாடகக்கலைகள் இவர்களாற் பெரிதும் வளர்ந்தன. மன்னனையேயன்றி மக்களையும் இவர்கள் தம் கலைத் திறமையால் மகிழ்வூட்டினர். சிற்றுார்களின் திருவிழாக்களிலும் இக்கலைஞர் கூட்டம் தம் கலைத்திறமையைக் காட்டி மக்களைக் களிப்பூட்டிய செய்தி பொருநராற்றுப் படையால் அறியக் கிடக்கின்றது.11


10.

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
     மீக் கூறும் மன்னன் நிலம்" - திருக்குறள் : 388

11. பொருநராற்றுப் படை-வரிகள் 1.3.