30
போர் முறை: நாடு காவலுக்கு நல்ல படை தேவை. யானைப் படை, குதிரைப்படை. தேர்ப்படை, காலாட் -படை ஆகிய நான்கே அங்காளில் பெரிதும் போற்றப் பட்டன. உள்நாட்டுக் குறும்பையும், வெளிகாட்டுப் படையெடுப்பையும் அரசனின் படைகள் தடுத்து கிறுத்தின. போர்க்களத்திலும் ஒர் அறநெறியினத் தமிழர் கையாண்டனர். படையெடுத்துச் செல்லுமுன் பகைவன் நாட்டில் வாழும் பசுக்கள். அறவோர். மகளிர், பிணியாளர், மகப்பேறு பெருதவர் முதலியோர் பாது காப்பான இடத்திற்குச் சென்று விடுக என்று அறிவுறுத்திவிட்டே மன்னர் பின்னர் படையெடுத்துச் சென்றனர். பகைவர் நாட்டின் பசுமந்தைகளைக் கவர்தலே போரின் தொடக்கமாக இருந்தது, பசுக்களைக் கவர்தலும் அப்பசுக்களுக்குரியவர் அவற்றை மீட்டலும் கவெட்சி எனப் பெயர்பெறும், அரசன் மாற்றார் மண்ணை வெல்ல வேண்டும் என்று கருதிப் பகைவர் காட்டின் மீது படையெடுத்துச் செல்லுதலும், படை யெடுக்கப்பட்டவன் எதிர்கின்று தாக்குதலும் “வஞ்சி’ எனப்படும். நகரத்தின் புறமதிலே முற்றுகையிடுதலும், முற்றுகையிடப்பட்ட அரசன் மதிலைக் காத்தலும், கொச்சி’ என்று கூறப்படும். இருபெருவேந்தரும் களங்குறித்துச் செய்யும் பெரும்போர் ‘தும்பை’ எனப் பெயர் பெறும். போரில் வெற்றி பெறுதல் வாகை” எனப்படும். வெட்சி, வஞ்சி, கொச்சி. தும்பை, வாகை முதலியன பூக்களின் பெயர்கள். அரசரும் படை மறவரும் அப்பூக்களைச் சூடிக்கொண்டே போர் புரிவர். இதல்ை தமிழர் அகவொழுக்கத்தில் இடம்பெற்ற பூக்கள் புறவொழுக்கத்திலும் இடம் பெற்றுள்ள :சிறப்புப் புலகுைம். போர் செய்யும்போது சோர்ந்த மனம் உடையவனேயும், குழந்தை பெருதோனேயும்,