32
“திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல’
கரிகால்வளவன் இமயம் சென்றபோது அவன்
பந்தரையும், மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபத் தையும் தந்தான் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடும். ‘
ஊர் மன்றங்கள். தமிழ்நாட்டுச் சிற்றார்களில் பொதுமன்றங்கள் இருந்தன. ஆட்சி மன்ற உறுப்பினர் ஊர்ப் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊரின் ஒவ்வொரு பகுதியினரும் தம் பகுதிக்குரிய ஒருவரை ஒலை மூலம் தேர்ந்தெடுத்தனர். வாக்காளரின் பெயர் பொறித்த ஒலைகள் குடத்தினுள் இடப்படும். அக்குடத்தின்மேல் அரசாங்க முத்திரை வைக்கப்படும். ஆவண மாக்கள். அம்முத்திரையை நீக்கி ஒவ்வோர் ஓலையாகப் படிப்பர். இச்செய்தியை,
கயிறுபிணிக் குழிசி ஒலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்’ “
என்னும் அகநானூற்றுப் பகுதியால் அறியலாம். இவ்வாறு ஊர்ப்பெருமக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஊர் மன்றத்தின் உறுப்பினராகக் குறிப்பிட்ட காலம் வரை பணி புரிவர். இத்தேர்தல் முறை பிற்காலச் சோழர் ஆட்சியிலும் தொடர்ந்து வந்தது என்பதனைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. குற்றம் செய்த வரைத் தண்டிப்பது ஊர் மன்றங்கள் மேற்கொண்ட ஓர் கடமையாகும். ஊர் மன்ற உறுப்பினர்கள் ஐந்து
14. சிலப்பதிகாரம் காட்சிக் காதை - வரி 36 15. சிலப்பதிகாரம் இந்திரவிழஆரெடுத்த காதை வரி 89.102 16. அகநானூறு 77