33
33
பிரிவினராக இருந்து பணியாற்றுவர். குடிமக்களின் குறைபாடுகளையும் முறையீடுகளையும் நேர்முகமாகக் கேட் டறிந்து நீதி வழங்குதலும், அறநிலையங்களைப் பாது காத்தலும் ஒரு சாரார் கடமைகளாக இருந்தன. நீர் நிலைகளைக் கண்காணித்தனர் பிறிதொரு சாரார். கெல்
முதலிய தானியங்களாகவும், காசாகவும் அரசாங்கத் திற்குக் குடிகள் செலுத்தும் நிலவரி முதலியவற்றை வாங்குவது மற்றாெரு பிரிவினர் கடமையாகும். இவ்வாறு வாங்கப்பட்ட பொற்காசு, செப்புக்காசுகளே
ஆராய்ந்து தொகுப்பர் வேறொரு பிரிவினர். இவ்வாறு இவ்வைந்து பிரிவினரும் (வாரியம்) யாதோர் ஊதியமு மின்றி ஊர் நலம் ஒன்றையே பொருளாகக் கருதி ஓர் ஆண்டிற்கு உழைப்பர். அவ்வப்போது அரசாங்க அதிகாரிகள் சிற்றுார்கட்கு வந்து இவற்றை யெல்லாம் மேற்பார்வையிட்டுச் செல்வர். இவ்வாறு நாடு முழுவதும் ஊர் மன்றங்களின் வாயிலாகச் சிற்றுார் ஆட்சி செம்மை யாக ஈடந்து வந்தது.
மக்கள் வாழ்க்கை தமிழ்நாடு நிலவமைப்பால் ஐந்து பிரிவாகப் பகுக்கப் பெற்றது. மலேயும் மலேயைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லே என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றும் கடலும் கடலேச் சார்ந்த பகுதியும் நெய்தல் என்றும், மழையின்றி வளம் குறைந்த காடும் மலேயும் கொண்ட பகுதி பாலே என்றும் கூறப்பட்டன. மலேயில் வாழ்ந்தவர் குறவர், குறத்தியர் எனப்பட்டனர். இவர்கள் வழிபட்ட கடவுள் முருகவேள் ஆவர். மலேநெல், மூங்கிலரிசி, தினே. கிழங்கு முதலிய வற்றை உணவாகக் கொண்டனர். வேட்டையாடுதலும் தேன் எடுத்தலும் இவர்களது தொழில். தொண்டகப்
3