பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

முறையைச் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில்

காணலாம்.

ககர வாழ்க்கை : சேரரது தலைநகரம் வஞ்சி சோழரது கோகரம் உறையூர். பாண்டியரது கோகரம் மதுரை. மன்னர்க்குரிய தலைநகரங்கள் மதில் முதலிய அரண்களுடன் அமைந்திருந்தன. அரசன் வாழ்ந்த அரண்மனை நகரத்தின் நடுவிடத்தே பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. அமைச்சர், படைத்தலைவர், வணிகர், பல திறப்பட்ட தொழிலாளர் முதலியோர் வாழ்வதற்கேற்ற பல்வேறு தெருக்கள் வரிசை வரிசையாக அமைந்திருந்தன. ஆங்காங்கே கோயில்களும், பொது மன்றங்களும், சோலை களும் கிறைந்து நகரம் அழகாகத் துலங்கிற்று. நகரத்து அழுக்கு நீரை வெளியிற் கொண்டு செல்லும் சாக் கடைக் கால்வாய்கள் கிலத்தின் கீழே மறைவாக அமைக் கப்பட்டிருந்தன.

இல்வாழ்க்கை: ஒருவனும் ஒருத்தியும் தாமே உள்ளத் தால் ஈர்க்கப்பட்டுக் காதல் கொண்டு பின் கற்பு நெறியில் தலைப்படுவது அக்காலத்தில் சிறப்பாகப் போற்றப் பட்டது. தமிழர் காதல் வாழ்வு விழுமியது; போற்றத் தக்கது. காதலால் ஒன்றுபட்ட இருவரும் ஒருயிர் போல் அறநெறியில் தம் வாழ்வை நடத்துவதே இல்வாழ்க்கை” எனப் போற்றப்பட்டது. இல் வாழ்க்கையின் அடிப்படை அன்பாகும்; கட்டடம் அறமாகும். இது குறித்தே திருவள்ளுவரும்,

“ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது ‘ - என்று கூறிப் போந்தார். இல்லறத்தில் மனைவியின் கிலை தலையாய இடம் பெற்றதாகும். “மனேக்கு

17. திருக்குறள் : 45