பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

விளக்கம் மடவார்’ எனப் புலவர் பாடியுள்ளனர். தானே அன்புடன் ஆக்கிய உணவினைக் கணவன் மிக இனிதெனக் கூறி உண்ணுதலைக் கண்டு மனைவி மகிழ்

ՀIITՇIT ո

“ தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.”

விருந்தினரைப் போற்றலும், சுற்றம் தழுவலும், அறவோர்க் களித்தலும், துறவிகளை உபசரித்தலும் இல்லறக் கடமைகளாகப் போற்றப்பட்டன.

பீடு நிறைந்த பெருவாழ்வு பழந்தமிழர் உழுதொழிலே மேற்கொண்டிருந்தனர். செய்யுங் தொழிலாக நெய்யுங் தொழிலக் கொண்டு நேர்த்தியான உடைகளே கெய்து மேல் நாடுகளுக்கும் அனுப்பி வைத்தனர். மிக நுண்ணிய வேலைப்பாடு கொண்ட அணிகலன்களே அமைத்து அவற்றை அணிந்து தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். வெண்கலக் கண்ணர், தச்சர், கொல்லர், ஒவியர், சிற்பியர். மண்பாண்டத் தொழிலாளர், பொற் கொல்லர், தையற்காரர், தோல்வேலே செய்வோர். மலர் மாலை புனைவோர் முதலிய பலவகைத் தொழிலாளர்கள் சமுதாயத்தில் வாழ்ந்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் கொண்டு அறியலாம். உள்நாட்டு வாணிகம் உற்சாகக் தரும் நிலையில் இருந்தது. வெளி நாட்டு வாணிகம் பிளைனி, தாலமி, பெரிப்பிளஸ் என்னும் நூலாசிரியர் ஆகியோர் வரைந்துள்ள குறிப்புக்கள்படி மிகச் சிறப்பான விலையினை எட்டியிருந்தது. கட்டடக்கலே.

18. குறுந்தொகை : 187 19. சிலப்பதிகாரம்-இந்திரவிழஆரெடுத்த காதை-வரி 28-34.