பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

ஒவியக்கலே, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை முதலிய துண்கலைகளில் தமிழர் தலைசிறந்து விளங்கினர். தாம் ஈட்டிய பொருளைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். உலகம் வாழவேண்டும் என்னும் உயரிய கோக்கு அவர்கள் செயல்களில் மிளிர்ந்தது. மெய்யுணர்வுத் துறையிலும் உயரிய கொள்கைகளை அவர்கள் உளங் கொண்டிருந்தனர். சுருங்கச் சொன்னல் தமிழர் வாழ்வு பீடு சான்ற வாழ்வாக, அறநெறி போற்றிய வாழ்வாக, செம்மை துலங்கிய வாழ்வாக, பண்பாடு கிலவிய வாழ்வாக மிளிர்ந்தது என்பது நன்கு புலகுைம்.